விஜய் டிவியில் வருடம் வருடம் விஜய் டெலிவிஷன் அவார்ட் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை,வெள்ளித்திரை என்று பலருக்கும் விருதுகளை கொடுத்து வருகிறார்கள்.
இந்த விஜய் டெலிவிஷன் அவார்ட் விழாவில் பலர் தங்களது மனதில் இருக்கும் பல விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் எனக்கு விருது கொடுக்கவில்லை என்று மனம் வருந்தி அழுதுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் 2021-க்ற்கான விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தொடர்ந்து அந்நிகழ்ச்சியின் புரோமோ இணையதளத்திலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 18-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளவர் தீபா. அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குப்பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் இவருக்கு பெரிதாக சமைக்க வராது. இதனை வைத்தே அனைத்து குக்குகள் மற்றும் கோமாளிகள் என்று அனைவரும் இவரை கலாய்ப்பார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.
அதோடு இவர் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபா எனக்கு விருது அளித்திருந்தால் என் அம்மாவின் புகைப்படத்தை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு விருது கிடைக்கவில்லை என்று மனம் வருந்தி அழுதுள்ளார். என்னைப் பார்த்த பலருக்கும் மிகவும் கஷ்டமாகிவிட்டது.