தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து தற்போது உள்ள இளம் நடிகைகளும் முன்னாள் உள்ள நடிகைகளும் எப்படியாவது நடிகர் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் பிரபலமான நடிகையும் ஒருவர் அது மட்டுமல்லாமல் அந்த நடிகை எப்படியாவது விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடிகை ராஸ்மிகாவிற்கு அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதனால் அவருடைய ஆசையும் பூர்த்தியானது.
வாரிசு திரைப்படத்தை முடித்த விஜய் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க உள்ளார் என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக பல தகவல்கள் எழுந்துள்ளது இப்படி ஒரு நிலையில் நடிகை ராஸ்மிகா இந்த வாய்ப்பை தட்டி தூக்குவதற்காக பல தில்லாலங்கடி வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தளபதி 67 படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ்க்கு போன் செய்து டார்ச்சர் செய்திருக்கிறாராம் ராஸ்மிகா மந்தனா. அனால் லோகேஷ் இதற்க்கு பதில் கூறவில்லையாம். அதுமட்டுமல்லாமல் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் ராஸ்மிகா மந்தனா விஜய்க்கும் போன் செய்து அடிக்கடி அவருடன் பேசி வருவாராம். எப்படியாவது அவருடன் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இப்படி செய்கிறார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.