Thalapathy 68 : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். வாரிசு படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து “லியோ”படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக உருவாகியுள்ளதால்..
படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. லியோ படத்தில் அனைத்து வேலைகளும் முடிந்தால் அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் படத்தில் இரண்டு கதாநாயகிகள் என கூறப்படுகிறது வயதான விஜய்க்கு ஜோதிகா ஜோடி எனவும், இளமையான விஜய்க்கு பிரியங்கா அருள் மோகன் ஜோடி எனவும் பேச்சுக்கள் அதிகமாக வந்தன.
அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தளபதி 68 படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் தளபதி 68 படத்திலிருந்து பிரபல நடிகை வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன அந்த நடிகை வேறு யாரும் அல்ல ஜோதிகா தான்..
அவர் பல்வேறு படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தளபதி 68 படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் அவருக்கு பதிலாக 90 கால கட்டங்களில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை வளைத்து போட்ட நடிகை சிம்ரன் தான் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது இதற்கான அறிவிப்பு படக்குழு சைடுல இருந்து வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.