தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். தற்பொழுது அவரைத் தொடர்ந்து அவரது வாரிசுகளான அருண்விஜய், ஸ்ரீதேவி, வனிதா மற்றும் பலர் வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர். தற்பொழுது அருண் விஜய் அல்லது அவரது அப்பா விஜயகுமார் பேமஸ் ஆகி இருக்கிறாரோ இல்லையோ அவரது மகள் வனிதா சமூகவலைதளத்தில் மிகப்பெரிய அளவில் தற்பொழுது பேமஸ் ஆகி உள்ளார்.
வனிதாவை தொடர்ந்து மற்றவர்கள் அவரவர் வேலையை செய்து சிறப்பாக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் அப்படி சிறப்பாக வாழ்ந்து வருபவர் தான் ஸ்ரீதேவி இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் பின்னாட்களில் ஹீரோயினாகவும் நடித்து புகழ் பெற்றார் அந்த வகையில் இவர் ரிக்ஷா மாமா அம்மா வந்தாச்சு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார்.
இவர் ஹீரோயினாக பிரியமான தோழி, தேவதையை கண்டேன்,தித்திக்குதே போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தமிழில் மட்டும் தனது சினிமா பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் பிற மொழிகளான தெலுங்கு, கன்னடம் போன்றவற்றிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம்வந்தார் இவர் கடைசியாக தெலுங்குவில் செல்போன் 2013 என்ற திரைப்படத்தில் நடித்தார்.
சினிமாக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த இவர் 2009 ஜூன் 18-ஆம் தேதி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகி தற்பொழுது குடும்பத்தை கவனித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவருக்கு 4 வயதில் ரூபிகா என்ற மகளும் இருக்கிறார்.இந்நிலையில் ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.