சூர்யாவை விட 3 வயது குறைவாக இருந்தாலும் அவருக்கு அம்மாவாக நடித்த பிரபல இளம் நடிகை.!

surya
surya

சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகைகள் கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் துணை கதாபாத்திரம், குணசித்திர நடிகை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி விடுகின்றனர் அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான நடிகைகள் சீரியல்களிலும் நடிக்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் சீரியலின் மூலம் தான் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை சீரியலில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் சூர்யாவை விட மூன்று வயது குறைவான இளம் நடிகை ஆவார். இவ்வாறு சூர்யாவை விட மூன்று வயது குறைவான அந்த நடிகை சூர்யாவிற்கு அம்மாவாக நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1994ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கருத்தமா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை ராஜஶ்ரீ. இந்த படத்தை தொடர்ந்து நீலகுயில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் அங்கும் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தின் மூலம் மீண்டும் அடுத்த தொடங்கினார். அந்த வகையில் இந்த படத்தில் பைத்தியக்கார பெண்ணாக ராஜஸ்ரீ நடித்திருந்த நிலையில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் பாலாவின் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்தான் நந்தா திரைப்படத்திலும் இவர் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்ரீ பாலாவிடம் இந்த படத்தில் நடிக்க முடியாது எனக் கூறுகிறார் ஏனென்றால் சூர்யாவை விட மூன்று வயது குறைய இருந்தவர் ஆனால் பாலா பேசி சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த ராஜஸ்ரீ ஒப்புக்கொள்ள வைத்தார். படப்பிடிப்பின் பொழுது கூட ராஜஸ்ரீ சூர்யாவை அண்ணன் என்னதான் அழைத்துள்ளார். அதன் பிறகு சூர்யா தன்னை பேர் சொல்லியே அழைத்துக் கொள்ளலாம் எனக் கூற இந்த படத்தில் ராஜஸ்ரீ பல மன சங்கடங்களுடன் நடித்துள்ளார்.