பொதுவாக வெள்ளிதிரையின் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து பிறகு வாய்ப்பில்லாத காரணத்தினால் சின்னத்திரையில் நடித்த வருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள். அந்த வகையில் அந்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த வகையில் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் இளைய மகளாக நடித்தவர் தற்பொழுது விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் சீரியல்களில் நடித்து வருகிறார் என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகிவுள்ளது.
1999_ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் படையப்பா. இந்தத் திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு இரண்டு மகள்கள் இருப்பார்கள் அதில் இளைய மகனாக விஜயகுமாரின் மகள் ப்ரீத்தா, இன்னொருவர் அனிதா வெங்கட். இவ்வாறு அனிதா வெங்கட் தான் தற்பொழுது தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி அம்மாவாக நடித்த வருகிறார் அனிதா வெங்கட்.
இவர் நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் சினிமாவில் சில பாடல்களையும் பாடியுள்ளார். இந்த வகையில் முக்கியமாக விஜய் சேதுபதியின் கருப்பன் ,ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். ஆஹா படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுது ரஜினியை பார்க்க அனிதாவை அழைத்து சென்றாராம் விஜயகுமார்.
அப்பொழுது ரஜினி அனிதாவை பார்த்து எனக்கெல்லாம் பொண்ணா நடிக்க மாட்டியா என கேட்கிறார் அதற்கு அப்படித்தான் படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றாராம். இதன் மூலம் பிரபலமடைய தொடங்கியவர் பாடகியாகவும் தன் சிறந்த திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில் 5000_க்கும் மேற்பட்ட மேடையில் பாடியுள்ளாராம். அதன் பிறகு ஒரு பட்டத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியலின் அடிப்பதை தொடங்கினார் அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அம்மாவாகவும் ,ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.