தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் சுந்தர் சி. இவர் அஜித்தை வைத்து உன்னை தேடி என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார். அதை தொடர்ந்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் திடீரென தானே இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். அந்த படங்களும் வெற்றி பெற்றன. இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர்..
சமீபகாலமாக பேய் படங்களை எடுத்து அசத்தி வருகிறார்கள் அந்த வகையில் அரண்மனை சீரிஸ் இவரை வேற லெவலுக்கு தூக்கி விட்டது. அரண்மனை 1, 2, 3 போன்ற பாகங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நான்காவது பாகம் உருவாகும் என அண்மையில் பட குழு அறிவித்தது அதன்படி இந்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என சொன்னது.
ஆனால் அது நிலைத்து நிற்கவில்லை சிறிது நாட்களிலேயே விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார்.. இதனால் வேறு ஒரு டாப் ஹீரோவை அரண்மனை நான்கில் நடிக்க வைக்க சுந்தர் சி தேடி வருகிறார் இது ஒரு பக்கம் இருந்தாலும் படத்திற்கு ஹீரோவை விட ஹீரோயின் தான் முக்கியம் ஏனென்றால் இவருடைய படங்களில் ஹீரோயின்க்கு தான் அதிக கதாபாத்திரம் இருந்துள்ளது..
அந்த வகையில் திரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா போன்றவர்களுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்த நிலையில் அரண்மனை 4 -ல் நடிகைகளுக்கு தான் முக்கியம் என்பதால் தற்பொழுது நாயகிகளை தட்டி தூக்கி வருகிறார் அதன்படி அரண்மனை நான்கில் ராசி கண்ணா நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது மற்றொரு நடிகை தமன்னா என கூறப்படுகிறது. தற்போது ஜெயிலர் பாலத்தில் நடித்து வருகிறார்.
அதை முடித்துவிட்டு அரண்மனை 4- ல் சுந்தர் சிக்கு தங்கையாக தமன்னா நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. திரிஷா, ஹன்சிகாவை தொடர்ந்து தமன்னா, ராசி கண்ணாவுக்கு இந்த படத்தில் வெயிட்டான ரோல், அதிகளவிற்கு கிளாமரும் இருக்கும் என சொல்லப்படுகிறது மொத்தத்தில் அரண்மனை 4 ரசிகர்களுக்கு செம விருந்து கொடுக்கும்..