நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் தற்போது கூட தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதன்முறையாக கூட்டமைப்பு தனது 66 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைத்துள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்ந்து வெளிவந்து அசத்தியது. அதனைத் தொடர்ந்து படக்குழு படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து எடுத்து வருகிறது இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து சரத்குமார், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ராஷ்மிகா மந்தனா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர் அந்த வகையில் வாரிசு திரைப்படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் மகேஷ்பாபு நடிப்பதாக கூறப்படுகிறது அவரைத் தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கனியாக 90 காலகட்டங்களில் வலம் வந்த நடிகை குஷ்பு.
23 வருடங்கள் கழித்து மீண்டும் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறாராம். 1999ஆம் ஆண்டு விஜயும், குஷ்புவும் இணைந்து மின்சார கண்ணா படத்தில் நடித்தனர் அதன் பிறகு இப்போதுதான் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் குஷ்புவும் இந்த படத்திற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்து செம அழகாக இருக்கிறார் அண்மையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கேரவனில் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படம்.