பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து பிரிந்த நடிகை மீண்டும் வந்துள்ளார். புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

pandiyan store
pandiyan store

விஜய் டிவியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன ஏனென்றால் கூட்டு குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது இதில் நான்கு அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் தற்போது சில காரணங்களால் கதிர் மற்றும் முல்லை இருவரும் பாண்டியன் ஸ்டோர் வீட்டை விட்டு பிரிந்துள்ளனர். இருவரும் தனியாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அந்த ஹோட்டல் திறப்பு விழாவிற்கு கதிர் மற்றும் முல்லை பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் சொல்லி உள்ளனர்.

அதனால் வீட்டில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமல் தனித்தனியாக கதிரின் ஹோட்டலுக்கு சென்று வந்துள்ளனர்.  இதனால் கதிர் மற்றும் முல்லை இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இன்று முதல் நாள் ஹோட்டலில் எவ்வளவு வருவாய் வந்திருக்கு என்பதை கணக்கு பண்ணி பார்க்கையில் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

முல்லையின் அக்கா மல்லி முதல் நாளே நஷ்டம் ஆகிவிட்டது இப்படியே கடை சென்றால் சுத்தமாக லாபம் பார்க்க முடியாது என அபசகுணமாக பேசியதால் கதிர் இன்னும் 30 நாட்களில் நல்ல லாபம் எடுத்துக் காண்பிக்கிறேன் என சவால் விட்டுள்ளார்.

இப்படி பாண்டியன் ஸ்டோர் தொடர் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகின்ற நிலையில் பாண்டியன் ஸ்டோர் செட்டில் தனத்துடன் இறந்த லட்சுமி அம்மாள் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் லட்சுமி அம்மாள் சீரியலுக்கு வந்துள்ளார் இவர் யாருடைய கனவிலாவது வந்து பேசி இருப்பாரா என கூறி வருகின்றனர்.

pandiyan store
pandiyan store