நிர்வாணமாக நடிக்கப் போவதை என்னிடம் சொல்லவில்லை என உண்மையை உடைத்த ‘விடுதலை’ பட நடிகை.!

viduthalai
viduthalai

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை வைத்து விடுதலை திரைப்படத்தை உருவாக்கியிருந்த நிலையில் இந்த படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப்போட்டு வருகிறது. முதன்முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சூரிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் சிலர் இந்த படத்தினை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபலம் ஒருவர் வெற்றிமாறன் பல புத்தகங்களில் இருந்து படித்து கதையை திருடி இருப்பதாகவும் அந்த புத்தகத்தை எழுதியவரிடம் உரிமை பெறாமல் படத்தை எடுத்திருப்பதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்தப் விடுதலை படம் குறித்து நடிகர், நடிகைகள் தங்களுடைய அனுபவங்களை கூறிவரும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்த நடிகை தென்றல் சமீப பேட்டி ஒன்றில் பல அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அதில் ஆரம்பத்தில் நான் படத்தில் இருக்கிறேன் என்று வெற்றிமாறன் சார் கூறியதும் உடனே ஷூட்டிங்க்கு சென்று விட்டேன், வெற்றிமாறன் சார் சொன்னதும் எதையும் கேட்காமல் சென்று விட்டேன்.

viduthalai 1
viduthalai 1

பிறகுதான் நிர்வாணமாக நடிக்க போகிறோம் என்ற தகவல் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் தெரியும் எனவும் மேலும் சின்ன கதை மட்டுமே என்னிடம் கூறினார்கள் அதில் ஹீரோயின் அம்மாவாக நான் நடிக்கப் போகிறேன் என டப்பிங் பண்ணும் போது தான் தெரியும் என தென்றல் கூறியிருக்கிறார். மேலும் அந்த படத்தில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை ஸ்கின் ஆடை அணிந்து நடித்து எடிட் செய்துவிட்டார்கள் என தென்றல் கூறியுள்ளார்.