சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள் தங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு சினிமாவில் இன்று வரையிலும் நிலைத்து நடித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சரியான அங்கீகாரம் இல்லாததால் வேறு வழி இல்லாமல் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அப்படி சினிமாவை விட்டு விலகிய பல நடிகர்களை பல பிரபலங்கள் சந்தித்து அவர்களை பேட்டி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் சினிமாவை விட்டு விலகி தற்போது ஒரு ஐஸ் கடையை நடத்தி வருகிறார். அவரைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து நடிகர்களுக்கு சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் பாரத் ஜெயந்த். இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தைப்போல திரைப்படத்தில் சின்ன வயது தம்பிகள் கதாபாத்திரத்தில் ஒரு தம்பியாக நடித்திருப்பார் அதிலும் குறிப்பாக அந்த சிறு வயதில் சைக்கிள் கேட்டு அடம்பிடிக்கும் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதேபோல பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜயின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகர் பாரத் தான் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் பிரியமான தோழி, இங்கிலீஸ் காரன் போன்ற பல திரைப்படங்களில் பல நடிகர்களுக்கு சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகர் பாரத்.
இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி அவரே ஒரு ஐஸ்கிரீம் கடையை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவரை அடையாளம் தெரிந்த பிரபல செய்தியாளர் ஒருவர் அவரை பேட்டி எடுத்து இருக்கிறார். அப்போது ஏன் சினிமாவை விட்டு விலகி ஐஸ்கிரீம் கடையை நடத்தி வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பாரத் ஜெயந்த் எந்த தொழிலாக இருந்தாலும் தனக்கு ஒரு சொந்த தொழில் இருக்க வேண்டுமென்று நினைத்து தான் நான் சினிமாவில் இருந்து விலகினேன் அது மட்டுமல்லாமல் யாருக்கும் அடிபணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் இந்த கடையை துவங்கிய போது பலர் ஐஸ் வாங்க வருவார்கள் அப்போது என்னை அடையாளம் கண்டுபிடித்து ஏன் சினிமாவை விட்டு விலகினீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் பாரத். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.