வெரும் மூன்று வயது வித்தியாசத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்த நடிகை..! நோண்டி நொங்கு எடுத்த ரசிகர்கள்..!

rajini
rajini

திரை உலகில் மலையாளத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் குலப்புள்ளி லீலா. இவ்வாறு பிரபலமான நடிகை அதிகம் நகைச்சுவை காட்சிகளில் தான் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளியான மருது திரைப்படமானது இவர் பிரபலம் ஆவதற்கு ஒரு முக்கிய பங்கானது. இதனைத் தொடர்ந்து அவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் அரண்மனை, நாச்சியார் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது வயதான நடிகை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கூட நடித்துள்ளார். அந்த வகையில் இவர் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்துள்ளார்.

இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரஜினிக்கு 70 வயது ஆகிறது.  ஆனால் அப்பத்தாவாக நடித்த குலப்புள்ளி லீலா விற்கு வெறும் 67 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெளிவந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் இதனை எப்படி நம்புவது என பலரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள். ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கச்சியாக நடித்ததை பலரால் ஜீரணிக்க கூட முடியவில்லை.  இந்நிலையில் அந்த பாட்டி கதாபாத்திரம் ரசிகர்களுக்கு ஒரு பேசுபொருளாக ஆகிவிட்டது.

annaththa
annaththa

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சகஜமாகி போய்விட்டது ஏனெனில் ஏற்கனவே சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த மீனா அவருக்கு அதன்பிறகு ஜோடியாகவும் நடித்துள்ளார் பின்னர் அவருக்கு அம்மாவாக கூட அடுத்த திரைப்படத்தில் நடித்தால் அதில் பெரிய விஷயம் ஒன்றும் கிடையாது.