கமல் படத்தில் அந்த மாதிரி காட்சியில் நடிக்க மறுத்த நடிகை.! பிடிவாதமாக நின்ற இயக்குனர்..

kamal--hassan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது தற்பொழுது வரையிலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கமலஹாசன் அவர்கள் ஏராளமான திரைப்படங்களில் முத்தக் காட்சியில் நடித்துள்ள நிலையில் அதுபோன்ற காட்சிகள் ஒரு நடிகை தான் நடிக்க முடியாது என கூறியும் அவருடைய விருப்பம் இல்லாமல் பிரபல இயக்குனர் அவரை நடிக்க வைத்தாராம் அது குறித்து அந்த நடிகை கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் 1988ஆம் ஆண்டு சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சூரசம்ஹாரம். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடித்திருந்தார். இவருடைய நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது சூரசம்ஹாரம் படத்தில் முத்தக் காட்சியில் பெற்றிருந்தால் நன்றாக இருக்கும் என படக் குழுவினர்கள் ஷூட்டிங் பொழுது நினைத்தார்களாம்.

nirosha
nirosha

எனவே இயக்குனர் சித்திரா லக்ஷ்மணன் நிரோஷாவிடம் இது குறித்து அனுமதி கேட்டாராம் ஆனால் அந்த சமயம் நிரோஷாவும் ஒப்புக்கொண்டு உள்ளார். ஆனால் அடுத்த நாள் காட்சி படமாக்கும் பொழுது நிரோஷாவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க விருப்பமில்லாததால் மறுத்துவிட்டாராம் முதலில் நடிக்கிறேன் என கூறிவிட்டு திடீரென மறுத்ததால் சித்ரா லக்ஷ்மணனுக்கு நிரோஷாவின் மீது மனக்கசப்பு ஏற்பட்டதாம்.

இதன் காரணமாக இவர்கள் மூன்று நாட்களாக பேசாமல் இருந்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் வேறு வழி இல்லாமல் நிரோஷா முத்தக் காட்சியில் நடிக்க ஓகே சொல்லி உள்ளார். ஆனால் கமல் இந்த காட்சி வேண்டாம் என கூறிவிட்டாராம். சினிமாவில் கமலஹாசன் அவர்கள் ஏராளமான திரைப்படங்களிலும் முத்தம் கொடுக்கும் காட்சி இடம் பெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.