விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திற்காக உடல் எடையை குறைத்த நடிகை.! இணையத்தில் பரவும் புகைப்படம்…

நடிகர் விக்ரம் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஒரு வரலாற்று கதை அம்சங்களைக் கொண்டு உருவாகி வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன். உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் வரலாற்று கதைகளத்தை கருவாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க.

இந்த நிலையில் இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக பிரபல நடிகை ஒருவர் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைத்து இருக்கிறார்.  அவர் வேற யாரும் இல்லை நடிகை பார்வதி தான் இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான இவர் தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் என்ற திரைப்படத்திலும் உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார் நடிகை பார்வதி. இவர் தற்போது தங்கலாம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான உடல் மாற்றத்தை செய்து இருக்கிறார் நடிகை பார்வதி. பொதுவாக நடிகர்கள்தான் இது போன்ற ரிஸ்கை எடுப்பார்கள் அதிலும் குறிப்பாக இந்த மாதிரி செயலை செய்வதற்கு குருவே நடிகர் விக்ரம் தான் ஆனால் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் அவரை விட பிரபல நடிகை பார்வதி அவர்கள் உடல் எடையை குறைத்து இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர் ஒர்க்கவுட் செய்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

barvathi

Leave a Comment

Exit mobile version