தென்னிந்த சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித் இவர் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இவ்வாறு இவர் தற்பொழுது சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தோல்வியடைந்த ஒரு திரைப்படத்தில் அஜித் ஜோடியாக நடித்திருந்த பிரபல நடிகை 23 வருடங்களாக அவரை ஒதுக்கி உள்ளார் எனவும் அந்த திரைப்படத்தின் தோல்வியினால் ஒட்டுமொத்தாகமாக சினிமாவை விட்டு விலகி விட்டார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவத ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா.
இவர் தமிழினைத் தொடர்ந்து மொத்தம் எட்டு மொழிகளில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தொடர்ந்து இவருக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை ரம்பா சினிமாவில் பிரபலமாக இருந்து வந்ததால் தனது 15 வயதில் கல்வியை முடித்துவிட்டு மலையாளத் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அதாவது ஹாரி ஹரனின் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் நடிகர் வினீத் ஜோடியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் இணைந்து ராசி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, என்றென்றும் காதல் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார் நடிகை ரம்பா.
ஆனால் அஜித்துடன் ஒரே ஒரு திரைப்படத்தில் தான் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது இதன் காரணமாக இதற்கு மேல் அஜித்துடன் நடித்தால் நம்மளுடைய மார்க்கெட்டை இழந்து விடுவோம் என்பதற்காக 23 வருடங்களாக அஜித்துடன் நடிக்காமல் தவித்து வந்துள்ளார் அதன் பிறகு சினிமாவில் மொத்தமாக விலகி விட்டார் என்ற தகவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது வெளியாகி உள்ளது.