அந்த காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது சினிமாவில் ஒரு சராசரியான அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு விஷயமாக ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக அட்ஜஸ்ட்மென்ட் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை பல நடிகைகளும் குணசித்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் சந்தித்து வருகின்றனர். பணத்திற்காகவும் பட வாய்ப்புக்காகவும் சிலர் இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்றுக் கொள்கிறனர்.
ஆனால் கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்று மறுத்த நடிகைகள் பலரும் பட வாய்ப்பு இல்லாமல் தனது தனித்துவமான திறமையால் எப்படியாவது பட வாய்ப்பு பிடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். அப்படி ஒரு நடிகை தான் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன இயக்குனரிடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதாவது பிரபல நடிகை ஒருவர் பல திரைப்படங்களில் காமெடி வேளங்களில் கலக்கியவர். அது மட்டுமல்லாமல் பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரைகள் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் அந்த நடிகை கலக்கி கொண்டு வருகிறார் அதிலும் அம்மா அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த நடிகை பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட் ஆனபோது அந்த படத்தின் இயக்குனர் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டு இருக்கிறார். அட்ஜஸ்ட்மென்ட் இல் விருப்பமில்லாத அந்த நடிகை முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த படத்தின் இயக்குனர் வேற ஒரு விதமாக அந்த நடிகையை பழிவாங்கி உள்ளார்.
அதாவது அந்த நடிகையின் காட்சி படம் பிடிக்கும்போது மட்டும் அதிக வெளிச்சம் தரும் லைட்டை பயன்படுத்தி சூட் செய்வாராம். இதனால் அந்த நடிகைக்கு எரிச்சல் அலர்ஜி போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது இருந்தாலும் அந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்று உறுதியோடு இருந்து அந்த படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார்.
இவரைப் போல பல நடிகைகளும் பல பிரச்சனைகளை திரையுலையில் சந்தித்து தான் வருகிறார்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தனது விடாமுயற்சியால் தற்போது வரையிலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.