ரஜினியின் “ஜெயிலர்” படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்த நடிகை.! குஷியில் ரசிகர்கள்

Jailer Movie

Jailer movie : தோல்வியிலிருந்து மீண்டு வருபவர்கள் எப்பொழுதுமே மிகப்பெரிய ஒரு வெற்றியை கொடுப்பார்கள் அந்த வகையில் ரஜினியும், நெல்சனும் சிறுசிறுவிக்கு பிறகு ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளனர் இதனால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவ ராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர் படம் வெளிவர இன்னும் சில நாட்களில் இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் ஜெயிலர் படம் இப்பவே கல்லாகட்ட ஆரம்பித்து விட்டது. இதுவரை மட்டுமே முன் பதிவில் மார் 20 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாம்..   இதனால் ரஜினியும் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஜெயில் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்துள்ள மிர்ணா ஜெயிலர் படம் குறித்து twitter பக்கத்தில் ஒரு பதிவை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால் ஜெயிலர் படம் Sureshot என்று சொல்லி ஃபயர் எமோஜி போட்டுள்ளார்.

mirnaa
mirnaa

இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சொல்வது உண்மைதான் நிச்சயம் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி பெறும் ரஜினி மீண்டும் யார் என்பதை இந்த படத்தின் மூலம் நிறுவியிருப்பார் எனக் கூறிவிட்டு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.