வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தூக்கி எறிந்த நடிகர்.! படம் ஹிட் ஆனதும் புலம்பல்

varuthapatatha valipar sangam
varuthapatatha valipar sangam

விஜய் டிவியின் மூலம் பலர் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் சிவகார்த்திகேயன்.  தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஷோ மூலம் போட்டியாளராக பங்குபெற்றார். இவ்வாறு இவரின் காமெடி திறமை மற்றும் பேச்சு திறமை பார்த்து அனைவரும் அசந்து போனார்கள். பிறகு விஜய் டிவியில் நீண்ட காலங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இத்திரைப்படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து காமெடி வசனங்களுமே இயக்குனர் ராஜேஷ் தான் எழுதியிருந்தார்.

அந்த வகையில் அனைத்து காமெடி வசனங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் காமெடி நடிகர் சூரியும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இவ்வாறு சூப்பர் டூப்பர் ஹிட்டான இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக பொன்ராம் நடிகர் ஜெய்யை தான் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தாராம். ஆனால் நடிகர் ஜெய் சில காரணங்களினால் இத்திரைப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். பிறகு பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கலாம் என்று சிவகார்த்திகேயனிடம் கேட்கும்பொழுது இதற்கு சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டாராம்.

jai 1
jai 1

அந்த வகையில் கிளைமாக்ஸ் காட்சியை மிகவும் சீரியஸாக அமைந்தாம் ஆனால் சிவகார்த்திகேயன் தான் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதை முடிவு செய்ததும் இதற்கு சிவகார்த்திகேயன் செட்டாக மாட்டார் என்று அதையும் ஓரளவிற்கு காமெடியாக மாற்றினாராம் இந்த தகவலை பொன்ராம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.