22 வருடமாக சினிமாவில் சாக்லேட் பாயாக இருந்து வரும் நடிகருக்கு சொந்த வீடு கூட இல்லையாம்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

madhavan

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகர் மாதவன். சாக்லேட் பாய் என்ற பெயருடன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் மேலும் இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். இதன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு ரீச்சை தந்ததால் தொடர்ந்து என்னவளே,மின்னலே, டும் டும் டும் ,பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

திரைப்படங்களுக்கு பிறகு தான் மாதவன் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வளம் வந்தார் அதன் பிறகு தொடர்ந்த தமிழ் ,தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, ஆங்கிலம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மாதவன் இயக்கத்தில், அவரே நடித்து உருவாகிவுள்ள திரைப்படம் தான் ராக்கெட்ரி.

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தான் ராக்கெட்ரி திரைப்படத்தின் கதை. திரைப்படம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி அன்று உலகில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வெளியாக இருக்கிறது மேலும் தற்பொழுது திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்ற வருகிறது.

MADHAVAN 1
MADHAVAN 1

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் மாதவன் சமீப பேட்டி ஒன்றில் தற்பொழுது வரையிலும் சென்னை மற்றும் துபாயில் இரண்டு வருடங்களாக மாறி மாறி வாடகை வீட்டில் தான் நானும் என்னுடைய குடும்பமும் வசித்து வருகிறோம் என்று அவர் கூறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நான் நினைத்திருந்தால் கமர்சியல் திரைப்படங்களில் நடித்து அதிகமாக பணம் சம்பாதித்து வீடு வாங்கி இருப்பேன் ஆனால் ராக்கெட்ரி திரைப்படத்தின் விளம்பரம் பணத்தினை வைத்து தான் வீடு வாங்குவேன் எனக் கூறியுள்ளார். இத்திரைப்படத்தினை நானே இயக்கி நானே நடித்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.