தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நாட்களில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஹீரோவாக அறிமுகமாக வழக்கம். அதில் வெற்றி பெற்றால் தொடர் படங்களை கைப்பற்றி சிறப்பம்சம் உள்ள படங்களில் நடித்து தன்னை வேற லெவலுக்கு கொண்டு செல்வார்கள் நடிகர்கள்.
அந்த வகையில் பல பிரபலங்கள் தற்போது தமிழ் சினிமாவில் இருகின்றனர். அவர்களில் ஒருவராக தற்போது வளரத் தொடங்கி உள்ளவர்தான் “இனிகோ பிரபாகரன்”.இவர் தமிழில் சுந்தர பாண்டியன், அழகர்சாமியின் குதிரை மற்றும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தன்னை சினிமா உலகிற்கு யார் என்று காட்டினார்.
நடிகர் இனிகோ பிரபாகரனின் ஒரு படத்தின் பாடல் இசை விழாவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி அழைக்கப்பட்டார் அப்பொழுது வாவர் நான் எனது தம்பி இனிகோ பிரபாகரனுகாக தான் இங்க வந்தேன். அவர் ஒரு சிறந்த நடிகர் அவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என அப்போதே கூறினார்.
உடனே அவருக்கு ஏற்றார் போல் கதையை ரெடி செய்து அவரை வைத்து “தென்மேற்கு பருவக்காற்று” என்ற திரைப்படத்தை எடுக்க ரெடியாக இருந்தார் ஆனால் அந்த சூழலில் அவர் பல்வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார் அந்த வகையில் இவர் அழகர்சாமியின் குதிரை மற்றும் அடுத்தடுத்த இரண்டு திரைப் படங்களில் கமிட்டாகி இருந்ததால் இந்த திரைப்படம் அவரால் நடிக்க முடியாமல் போனது.
அதன்பிறகு விஜய் சேதுபதியை வைத்து எடுத்தார். ஹீரோவாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனது முதல் வெற்றியை பதித்தார்.இனிகோ பிரபாகரன் வேறொரு திரைப் படத்தில் நடித்தால் இந்த படம் கை நழுவியது. மேலும் அடுத்த மூன்று படங்களிலும் அவரால் நடிக்க முடியவில்லை அது வேற காரணம் என குறிப்பிட்டார்.