அசினுக்கு அண்ணனாக காவலன் திரைப்படத்தில் நடித்த நடிகருக்கு 4 மகளா அதிலும் ஒருவர் நடிகை வேற.! யாருக்காவது இந்த தகவல் தெரியுமா.?

kirushna-kumar-01
kirushna-kumar-01

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று காவலன். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் மற்றம் காமெடிக்காக வைகைப்புயல் வடிவேலு உட்பட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். அந்தவகையில் மலையாளத்தில் பாடிகார்ட் என்ற பெயரை மாற்றி தமிழில் காவலன் என்று வைத்தார்கள். சினிமாவில் பொதுவாகவே தமிழிலிருந்து நடிகர், நடிகைகள்  மலையாளம், தெலுங்கு போன்ற மற்ற மொழி திரைப்படங்களில் நடிப்பது அதேபோல மற்ற மொழி நடிகர், நடிகைகள் தமிழில் வந்து நடிப்பது இதெல்லாம் சகஜமான ஒரு விஷயமாகும்.

அந்த வகையில் மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணகுமார். இவர் காவலன் திரைப்படத்தில் அசினின் அண்ணனாக நடித்திருப்பார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் காஷ்மீரம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்திற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் வெளிவந்த சதயம் என்ற திரைப்படத்தின் மூலம் 2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தில்லாலங்கடி,காவலன், தெய்வத்திருமகள், வெளிநாடு முகமூடி போன்ற ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் தமிழில் மேமொரீஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஆரம்பத்தில் தூர்தர்ஷன் என்ற சேனலில் தான் பணியாற்றி வந்துள்ளார். அப்போது சிந்து என்ற பெண்ணின் மீது காதல் மலர்ந்ததால் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.

kirushana kumar family
kirushana kumar family

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த வகையில் இவரின் ஒரு மகள் தான் அஹானா. இவர் மலையாளத்தில் 2014ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆல்பம் சாங் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது மலையாளத்தில் உள்ள இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

kirushna kumar wife
kirushna kumar wife