தலைவர் 170 : ரஜினிக்கு வில்லனாகும் பொன்னியின் செல்வன் பட நடிகர்.? சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா..

rajini
rajini

40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர் கடைசியாக நடித்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த பொழுதிலும்..

வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனை தொடர்ந்து இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுக்க இளம் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி..

தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இது இப்படி இருக்க மறுபக்கம் ரஜினி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் “லால் சலாம்” திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்கின்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன் போஸ்டர் கூட சமீபத்தில் வெளிவந்து வைரலானது.

இதை முடித்த கையோடு அடுத்ததாக ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல்  இயக்க உள்ள படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் அந்த படம் ரஜினிக்கு 170-வது படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதைக்கு ஏற்ப ரஜினிக்கு வில்லனாக ஒரு டாப் ஹீரோ நடித்தால் சிறப்பாக இருக்கும் என படக்குழு முடிவு செய்தது.

vikram
vikram

அதன்படி பொன்னியின் செல்வன் பட ஹீரோ விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தியது அவரும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டு உள்ளாராம் இந்த படத்தில் நடிக்க அவருக்கு 50 கோடி சம்பளம் கொடுக்காமல் லைகா நிறுவனம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது இது குறித்து தகவல்கள் வெகு விரைவிலயே அதிகாரப்பூர்வமாக வரும் என கூறப்படுகிறது.