நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் அவருக்கு மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தான் பருத்திவீரன் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் ப்ரியாமணி,பொன்வண்ணன், சரவணன்,கஞ்சா கருப்பு போன்ற பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் என்றே கூறலாம்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் தான் குட்டி சாக்கு என்கிற விமல் ராஜ் இவர் இந்த திரைப்படத்திற்கு பின்பு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லையாம்.இந்தத் திரைப்படத்திற்கு பின்பு இவர் தமிழ் சினிமாவில் அடையாளமே இல்லாமல் போய்விட்டார்.
இவரை புஹாரி என்ற யூடிப்சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்ததன் மூலம் தான் பல பிரபலங்களும் இவர் தானா பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்த குட்டி சாக்கு என்று ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அந்தப் பேட்டியில் தனது வாழ்க்கை பற்றி கூறிய விமல் ராஜ் என்னுடைய ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம் வேலைக்காக தினமும் உசிலம்பட்டியில் இருந்து மதுரைக்கு வந்து செல்கிறேன்.
நான் இப்பொழுது சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன் தெரிந்த நபர்கள் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அது மட்டுமல்லாமல் கருவாச்சி கதாபாத்திரத்தில் நடித்த சின்னப்பொண்ணும் என்னுடன் படித்தவர் தான் ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்பு எந்த திரைப்படத்திலும் நடித்தது கிடையாது முதல் படத்தில் நடிக்கும் பொழுதே கொஞ்சம் தயக்கமும்,பயமும் இருந்தது ஆனால் படப்பிடிப்பு போக போக சரியாகிவிட்டது.
ஆரம்பத்தில் நடிக்கும் பொழுது டயலாக்கை எழுதிக் கொடுத்து மனப்பாடம் பண்ண சொல்வார்கள் இந்தத் திரைப்படத்தில் நடிப்பதால் பள்ளிக்கூடம் ஒழுங்காக போகாமல் கூட நடித்தேன். என்னுடைய கண்ணு தான் அந்தப் படத்திற்கு அடையாளமாக இருந்தது இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு நான்கு வருடத்திற்கு முன்பு குச்சி பட்டு கண் இந்த மாதிரி ஆகிவிட்டது.
மருத்துவர்களிடம் காட்டிய பொழுது கண் அவ்வளவுதான் என்று சொன்னார்கள் எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளாராம் மேலும் பருத்திவீரன் படம் வெளியே வந்த பொழுது என்னை பலரும் பாராட்டினார்கள் என்னுடைய குடும்பத்தில் நானும் என்னுடைய தம்பியும் இருக்கிறோம் அம்மா விவசாயம் பண்ணுறாங்க அப்பா இறந்து விட்டார் என் அப்பா இறக்கும்பொழுது எனக்கு விபத்து ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் கோமாவில் இருந்தேன்.
அந்த சமயத்தில் தான் என் அப்பா இறந்துவிட்டார் எனக்கு நினைவு திரும்பும் பொழுது ரொம்ப வருத்தப்பட்டேன் இறந்தபொழுது கூட அவரோடு இல்லையென்று நினைத்து ரொம்ப நாள் வருத்தப்பட்டேன். பருத்திவீரன் படத்திற்கு பிறகு நான் ஆடு,மாடு,கோழிகளை வளர்ப்பதில் சில வருடம் செய்து கொண்டிருந்தேன். அதிலும் குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகள்,சண்டை சேவல் போன்றவற்றையெல்லாம் வளர்த்துக் கொண்டிருந்தேன் அதற்குப் பிறகுதான் இந்த லோடுமேன் வேலைக்கு வந்தேன் என கூறினாராம்.
மேலும் இவர் கூறிய பேட்டியை பார்த்த முன்னணி பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னால் முன்னணி பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அழைத்து இருந்தார்கள் குட்டி சாக்கு பேட்டியை பார்த்து அடுத்த படத்துக்கான சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக சொன்னார்கள் இதனை தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எப்படியோ இவர் மீண்டும் சினிமாவில் நடித்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.