தமிழ்சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், தற்பொழுது இவர் வசூல் மன்னனாக வலம் வருகிறார், தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஊரடங்கும் முடிந்ததும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், செல்வாக்கு மிகுந்த நடிகர்களில் விஜய்யும் ஒருவர் இவர் வீட்டின் முன்பு பல கார்கள் நின்றாலும் அதில் எதையும் அவர் எளிதாக பெற்று விடவில்லை என்பதற்கு இந்த செய்தி தான் உதாரணம்.
தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏசி அவர்கள் மூன்று படத்தை இயக்கிய பிறகும் ஸ்கூட்டரில் தான் சென்றுள்ளார். ஒருநாள் எஸ் ஏ சி ஸ்கூட்டரில் தன் மனைவி மற்றும் மகனுடன் கோடம்பாக்கம் பாலத்தில் சென்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார் ஜெய்சங்கர், அப்பொழுது அவருக்கு மிகவும் மன கஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதனால் ஜெய்சங்கர் உடனே விஜய்யின் தந்தை எஸ்ஏசி அவர்களிடம் மூன்று படங்களை இயக்கிய பின்பும் ஸ்கூட்டரில் தான் செல்லவேண்டுமா ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது, எனக் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் தனது கார்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டுகோளை முன்வைத்தார்.
ஆனால் எஸ்ஏசி அவர்கள் மிகவும் தயங்கி உள்ளார்கள் அதன்பிறகு சரி தவணை முறையில் அதற்கான பணத்தை கொடுத்து விடுங்கள் என ஜெய்சங்கர் கூறியுள்ளார் அதன்படி விஜயின் குடும்பத்திற்கு சிவப்பு கலர் fiat கார் சொந்தம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.