தெரியாமல் விஜய் பற்றி பேசி மாட்டிக்கொண்ட நடிகர்..! வேணும் என்றளவுக்கு வச்சி செய்த ரசிகர்கள்..!

beast

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இவருடைய நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாகின ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மை.

அந்த வகையில் விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் தோல்வியை கொடுத்திருந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது அந்த வகையில் இந்த திரைப்படம் சிலருக்கு மிகவும் பிடித்திருந்தாலும் இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக வெளிவந்த ட்ரைலர் கொடுத்த பிரம்மாண்டத்தை இந்த திரைப்படம் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷைன் டாம் சாக்கோ அவர்கள் சில நாட்களுக்கு முன்பாக நேர்காணல் ஒன்றில் பீஸ்ட் திரைப்படம் பற்றி பேசி உள்ளார் அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் தளபதி விஜய் என்னை தூக்கிக்கொண்டு எந்த ஒரு முக பாவனை இன்றி செல்வார்.

பொதுவாக ஒரு வெயிட்டான பொருளை தூக்கும் பொழுது முகத்தில் மாற்றம் தெரிய வேண்டும் ஆனால் விஜய் திரைப்படத்தில் அப்படி செய்யவில்லை முகத்தில் எந்த ஒரு எக்ஸ்பிரஸனும் கிடைக்கவில்லை இந்நிலையில் நான் பீஸ்ட் படத்தை பற்றிய ட்ரோல்களை தான் பார்த்து வந்துள்ளேன்.

இன்னும் நான் அந்த திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் இவ்வாறு விஜய் திரைப்படத்தில் நடித்த நடிகர் இவ்வாறு பேசியதன் காரணமாக தளபதி ரசிகர்கள் அவரை வைத்து கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இவ்வாறு  இந்த நேர்காணலுக்கு பிறகாக தளபதி ரசிகர்களிடம் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளான நமது நடிகர் என்னை மன்னித்து விடுங்கள் நண்பா என்று விஜய் ரசிகர்களிடம்  சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கேட்டது வைரலாக பரவி வருகிறது.

beast
beast