The action taken by Commander fans in encouraging doctors and nurses: பொதுவாக தமிழகத்தில் இயற்கையால் ஏற்படும் சீர்கேடுகளுக்கு முன்வந்து உதவுபவர்களில் விஜய் ரசிகர்கள் வல்லவர்கள். அந்தவகையில் விஜய் ரசிகர்கள் சமீபத்தில் பெய்த கனமழை, புயல் என அனைத்து வகையான பிரச்சனையின் போதும் மக்களுக்கு முன்வந்து உதவியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகமாகி விட்டன இந்நிலையில் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் முதலமைச்சர் ஆன மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிதியுதவி கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார் இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் பிரபலங்களும் உதவ முன் வந்துள்ளார்கள்.
இந்நிலையில் வசதியாக இருக்கும் பல்வேறு தொழிலதிபர்களும் பிரபலங்களும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் வைரஸின் தாக்கம் அதிகமானதன் காரணமாக மருத்துவமனையில் குவியும் நோயாளிகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் பற்றாக்குறையின் காரணமாக ஏற்கனவே இருக்கும் பணியாளர்கள் அனைவரும் அதிகப்படியான நேரம் வேலை செய்யுமாறு ஆகிவிட்டன. மேலும் பணியாளர்களும் தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் பணியில் கவனம் செலுத்துகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் என அனைவரையும் பாராட்டி விஜய் ரசிகர் மன்றத்தின் மூலமாக தங்க நாணயத்தை பரிசாக வழங்கி அவர்களை கெளரவித்துள்ளார்கள். இவ்வாறு செய்த செயலானது சமூக வலைதளத்தில் விரலாக பரவி வருகிறது.