தமிழ் நாட்டிற்கே பயன்படும் அஜித்தின் செயல்.! இவர் தான் ரியல் ஹீரோ சந்தோஷத்தில் ரசிகர்கள்!!வீடியோ உள்ளே.

ajith

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். தற்பொழுது அவர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருகிறது. அதுபோல, தற்போது இந்தியாவிலும் 144 தடை ஏப்ரல் 21 வரை பிரபிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் மக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் அஜித்தை போல வீட்டிலேயே இருங்கள் என கிண்டல் செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் அவர்கள் தக்க்ஷா குழுவுடன் இணைந்து உருவாக்கிய ஆளில்லா குட்டி விமானம், உதவி செய்ய தயாராக இருக்கிறது.எதற்கு என்றால் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அதனை தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்க உதவியாக இருக்கும் என ஆலோசனை கூறியுள்ளார்.

அஜித் ரசிகர்கள் உண்மையில் எங்க தல தான் ரியல் வாத்தியார் என கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எங்க தல வீட்டிலிருந்தாலும், அவரது செயல் எல்லோருக்கும் பயன்படுகிறது என தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ