உலகின் 8வது அதிசயம் இந்த நடிகர் தான்! புகழ்ந்து தள்ளும் நடிகர் விஷால்

Vishal

Rajini : தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். மேலும் லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 171 திரைப்படத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் எல்லாம் வெளிவந்துள்ளன இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி விஷால் பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. உலகத்தில் மொத்தம் 7 அதிசயம் இருக்கு 8 வது அதிசயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஒரு பொறுப்பு என்கின்றதை விட மக்களால் கொடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார்..

பட்டத்தை 45 வருடங்களுக்கு மேலாக தக்க வைத்து ஓடுகிறார் இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் மேலும் எங்களை போன்ற நடிகர் மற்றும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு ரோல் மாடலாக ரஜினி இருந்து வருகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வயது பெறும் நம்பர் தான் என தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

Rajini
Rajini

மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நானும் கார்த்தியும் ரஜினி கமலையும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்க வைக்க ஒரு மாஸ் ப்ளான் போட்டோம் ஆனால் அந்த மேனேஜர் முடியாது என்றாலும் உடனே இது நடக்கவில்லை என்றால் நாங்கள் சென்னையிலேயே நடத்துகிறோம் என்று சொன்னோம் பிறகு ஒரு வழியாக செய்து காட்டினோம் என விஷால் பெருமையாக பேசினார்.