நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்தனர் தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளை பார்த்து வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் 62வது படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்துள்ளார் அந்த இயக்குனர் வேறு யாருமல்ல நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தான்.
இதனை அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார் நான் அஜித்தின் 62 வது படம் எடுக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அஜித் படத்தை முதல்முறையாக விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக சந்தோஷத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த படத்திற்கான நடிகர் நடிகைகளையும் ஒவ்வொருவராக செலக்ட் செய்து வருகிறார் இது இப்படி இருக்க..
நடிகர் அஜித்குமார் தனது 62வது திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் சில கண்டிஷன்கள் விக்னேஷ் சிவனுக்கு போட்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.முதல் கண்டிஷன் இந்த படத்தில் எந்த ஒரு சீனிலும் அரசியல் இருக்கவே கூடாது இரண்டாவது கண்டிப்பாக குடும்ப சென்டிமெண்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதுதான்.
இந்த இரண்டு கண்டிஷன்கள் அஜித் போட்டுள்ளார். இதை அவர் சரியாக பயன்படுத்தி சிறப்பான ஒரு படத்தை எடுக்க வேண்டும் அதே சமயம் சொன்ன கதையை திருத்தி சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் விக்னேஷ் சிவன் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க மிக பிரமாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.