அடுத்த வருடம் ஐபிஎல் 15வது சீசன் கோலாகலமாக நடக்கிறது புதிதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்துள்ளதால் ஏற்கனவே இருந்த 8 அணிகள் நான்கு வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டது இதனையடுத்து ஒவ்வொரு அணியும் சிறந்த நான்கு வீரர்களை தன்வசப்படுத்திக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது.
அந்த வகையில் டெல்லி கேப்பிடல் அணி ரிஷப் பண்ட்டை 16 கோடி கொடுத்து முதலாவதாக தன் வசப்படுத்திக் கொண்டது. அடுத்ததாக அக்ஷர் பட்டேல் 9 கோடி, பிரித்வி ஷா 7.5 கோடி, நோர்க்கியா 6.5 கோடி கொடுத்து இந்த நான்கு வரையும் தக்க வைத்துக் கொண்டது. டெல்லி கேப்பிடல் அணியில் ஏற்கனவே சிறந்த வீரர்களான ஷிகர் தவான் அஸ்வின், அவேஷ் கான் போன்ற வீரர்களை தக்க வைக்கத் தவறியது.
அதை ஈடுகட்டும் வகையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஐபிஎல் மெகா ஏலம் 17, 8 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது அதில் குறிப்பாக 5 வீரர்களை தட்டி தூக்க டெல்லி கேப்பிடல் அணி போராடும் என தெரியவருகிறது அதன்படி பார்க்கையில் முதலாவதாக டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக சமீப காலமாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரை ரிலீஸ் செய்துவிட்டு அது அவரை மீண்டும் தட்டி தூக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக காசிசோ ரபாடா.
இவர் ஏற்கனவே டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடி வந்தவர் இவரையும் மீண்டும் தன் வசப்படுத்திக் கொள்ள அதிகம் ஆர்வம் காட்டும் என தெரியவருகிறது. மூன்றாவது வீரராக ஷர்துல் தாகூரை குறிவைத்து உள்ளது சென்னை அணிக்காக சிறப்பாக பவுலிங் மற்றும் பேட்டிங்கில் விளையாடி வரும் இவரை தூக்குவதற்காக முயற்சிக்கும் என தெரிகிறது.
அடுத்ததாக பஞ்சாப் அணியில் விளையாடி வரும் ஹர்பரீத் ப்ரார் என்ற ஆல்ரவுண்டர் இதை தடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக டெல்லி கேப்பிடல் அணி டேவிட் வார்னரை குறிவைக்கும் என தெரியவந்துள்ளது. டெல்லி அணிக்காக ஆரம்பத்தில் விளையாட்டிய டேவிட் வார்னர் மீண்டும் அவரை அப்படி தூக்கி அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து வீரரை முதலில் டெல்லி கேப்பிடல் அணி எதிர்பார்த்து இருக்கிறதாம்