கொரோனா பரவலுக்கு பின் வெளிவந்த படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த 5 படங்கள்.! கடைசி இடத்தில் விஜய்.

tamil actors
tamil actors

சில வருடங்களுக்கு முன்பு கொரோனா பரவல் அதிகரித்து. அதனால் அனைத்து துறையும் ஆட்டம் காண வைத்தது குறிப்பாக சினிமா துறையையும் ஒரு படாத பாடு படுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பரவல்  குறைய தொடங்கியதை அடுத்து தமிழ் சினிமா உலகில் தொடர்ந்த டாப் நடிகர்கள் படங்கள் வெளிவந்திருக்கின்றன அதிலும் குறிப்பாக முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 படங்கள் பற்றி தான் நாம் தற்போது பார்க்க இருக்கிறோம்.

முதலிடத்தில் இருப்பது அஜித்தின் வலிமை : நேர்கொண்டபார்வை படத்திற்கு பிறகு அஜித் இரண்டாவது முறையாக  ஹச். வினோத்துடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் வலிமை இந்தப் படம் இரண்டு வருடம் கழித்துதான் திரையரங்கில் வெளியானது முதல் நாளில் மட்டுமே வலிமை திரைப்படம் சுமார் 36.17 கோடியை வசூலித்து அசத்தியது.

இரண்டாவது இடத்தை பிடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ததின் அண்ணாத்த : எப்பொழுதுமே மாஸ் கலந்த படங்களில் நடிப்பதை ரஜினியின் ஸ்டைல் அந்த வகையில் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து ரஜினி நடித்த திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது குறிப்பாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா,  பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, அபிமன்யு என பலர் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படம் முதல் நாளில் மட்டுமே சுமார் 34.92 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது.

மூன்றாவது இடத்தில் பீஸ்ட் : விஜய் முதல்முறையாக நெல்சன் உடன் கை கோர்த்தது பணியாற்றிய திரைப்படம் தான்  பீஸ்ட். இது விஜய்க்கு 65வது திரைப்படமாக இருந்தது இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருந்தது முதல் நாளில் இந்த படம் சுமார் 26.40 கோடி வசூல் செய்தது.

நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது எதற்கும் துணிந்தவன் :அண்மை காலமாக சமூக அக்கரை உள்ள படங்களில் நடித்து வருபவர் சூர்யா அந்த வகையில் ஜெய்பீம் திரைப்படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் ஒரு சமூக அக்கறையை எடுத்து உரைக்கும்  திரைப்படமாக இருந்தது இந்த படம் ஆரம்பத்திலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது முதல் நாளில் இந்த திரைப்படம் 15.21 கோடி வசூலித்தது.

5-வது இடத்தை படித்தது மாஸ்டர் : விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும்போது  கொரோனா பரவல் காரணமாக 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது அப்போதும் கூட முதல் நாளில் சுமார் 15.03 கோடி வசூல் ஈட்டியது.