தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித் இப்பொழுது கூட தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக அஜீத் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிலோ உடல் எடையை குறைத்து உள்ளார்.
அஜித் புதிய நோக்கில் இந்த படத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விடும் மேலும் படக்குழு சொன்னதுபோலவே தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பரான தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா உலகில் டாப் ஹீரோவாக இருக்கும் அஜித்துடன் நடித்தால் போதும் தான் மிகப்பெரிய ஒரு உச்சத்தை சினிமாவுலகில் எட்டி விடலாம் என பல இளம் நடிகர், நடிகைகள் கணக்கு போட்டு உள்ளனர். ஆனால் தற்போது வந்த தகவல் அஜித்துடன் நடித்த பிறகுதான் இந்த நடிகைக்கு சினிமா உலகில் வாய்ப்பு கிடைக்கவில்லை என ரசிகர்கள் கூறிய கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தியவர் லட்சுமிமேனன் இவர் அஜித்துடன் வேதாளம் படத்தில் தங்கையாக நடித்த பிறகு சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியது எனவும், பின்பு ஓரிரு படங்கள் கிடைத்தது அதன் பிறகு சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் தற்போது படிக்க தொடங்கி உள்ளார் என பலரும் கூறி கலாய்த்து வருகின்றனர்.