வெள்ளித்திரையில் செந்தில்,கவுண்டமணிக்குப் பிறகு அவர்கள் இடத்தை பிடித்த நடிகர் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு தான் செந்தில் கவுண்டமணி நடிகர்கள் காமெடியில் கலக்குவதில் மிகவும் வல்லுனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ஆனால் அதையும் தாண்டி வடிவேலு ஒரு படி மேலாக மக்கள் மத்தியில் மிகவும் கட்டில் போட்டு அமர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
ஒரு காலத்தில் வடிவேலு இல்லாத திரைப்படமே இல்லை என்ற அளவிற்கு இவர் அனைத்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.இந்த திரைப்படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்க ஷங்கர் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்ததால் இந்த படம் வெளியானபோது பல நடிகர்களின் திரைப்படங்களை ஓரம் கட்டி விட்டது என்றுதான் கூறவேண்டும்.
வசூல் ரீதியாக சுமார் பல கோடி வசூல் செய்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க பூஜை போட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற இரண்டாம் பாகத்தில் மீண்டும் கதாநாயகனாக வடிவேலு நடிக்க தயாரானார் இந்த இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திடீரென வடிவேலு ஒழுங்காக தேதி தராமல் படப்பிடிப்புக்கு வராமல் இருக்கிறார் என பட தரப்பிலிருந்து கூறப்பட்டது இதனால் வடிவேலுக்கும் படக்குழுவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுவை எச்சரிக்கும் வகையில் அவருக்கு ரெட் கார்ட் போட்டுவிட்டார்கள் இதனால் பல இயக்குனர்கள் மற்றும் பல தயாரிப்பாளர்களும் வடிவேலுவை வைத்து திரைப்படங்கள் இயக்க பயந்தார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது படக்குழுவுக்கும் வடிவேலுவுக்கும் உள்ள பிரச்சனை தீர போவதாகவும் கூடிய சீக்கிரம் வடிவேலு மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படம் கூடிய சீக்கிரம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த பிரச்சனை மட்டும் முடிந்து விட்டால் வடிவேலு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது என பல சினிமா பிரபலங்களும் கூறுகிறார்கள்.