அசுரன், பாவ கதைகளை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் விடுதலை இந்த படம் நீளமான படமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது அதன்படி முதல் பாகம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பிரகாஷ்ராஜ் என பலர் நடித்துள்ளனர். அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் வேறு இரண்டு நடிகர்களை சந்தித்து உள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் அணுகி உள்ளார் அது குறித்து நாம் பார்க்க இருக்கிறோம்.. முதலில் இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்து கைத்தட்டல் வாங்கிய நடிகர் கிஷோரை சந்தித்து தான் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தை சொல்லி இருக்கிறார் ஆனால் அவரோ பல்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறாகி விட்டிருக்கிறார்.
உடனே வெற்றிமாறன் இமயம் இயக்குனர் பாரதிராஜாவை சந்தித்து இந்த கதையை கூறி இருக்கிறார் அவருக்கு அந்த கதாபாத்திரம் ரொம்ப பிடித்திருந்தாலும் இந்த படத்தின் சூட்டிங் காடு, மலை போன்ற பகுதிகளில் காட்சிகள் எடுக்கப்படும் என சொன்னவுடன் இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
பிறகு தான் நடிகர் விஜய் சேதுபதியை விடுதலை படத்தில் கமெண்ட் செய்தாராம். வந்த உடனே நடிக்க வைக்கவில்லை எட்டு நாள் விஜய் சேதுபதியை வைத்து வெறும் டெஸ்ட் சூட் மட்டுமே எடுத்துள்ளார் அவர் சிறப்பாக நடிக்க பிறகு விடுதலை படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தாராம். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் தீயை பரவி வருகிறது.