சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள், அதே போல் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்து விடுவார்கள். அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து விடுகிறார்கள். அந்த வகையில் 90 காலகட்டத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ரஞ்சிதா.
இவர் அப்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஹீரோயினாக மட்டுமல்லாமல் கிளாமரான பாடல் வந்தாலும் அதில் தயக்கமில்லாமல் நடித்துக் காட்டினார்.
சினிமாவில் ரஞ்சிதா முதன்முதலாக நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் அறிமுகமானார் அந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்கியிருந்தார். இப்படி ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய பொண்டாட்டி ராஜ்ஜியம் பேண்ட் மாஸ்டர் ஜெய்ஹிந்த் அமைதிப்படை கருணா தாஜ்மஹால் என பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
பின்பு ஒரு காலகட்டத்திற்கு பிறகு நித்தியானந்தாவுடன் இணைந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் நித்தியானந்த உடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஞ்சிதா அர்ஜுன் அவர்களுடன் இணைந்து கர்ணா என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார். அந்தத் திரைப்படத்தின் பொழுது அர்ஜுன் தனக்கு உடல் ரீதியாக பல தொல்லைகளை கொடுத்தார் என ரஞ்சிதா கூறியுள்ளார்.
அதனால் வேறு வழியில்லாமல் நான் சினிமாவை விட்டு விலகினேன் என அர்ஜுன் மீது அப்பண்டமாக பழி சுமத்தியுள்ளார் ரஞ்சிதா ஆனால் இதனை பயில்வான் ரங்கநாதன் அவர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்கள் யாருடைய ஒப்புதல் இல்லாமலும் அவர்களை விரால் கூட தொட மாட்டார் என அர்ஜுன் அவர்களுக்கு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஆதரவாக பேசியுள்ளார்.