Actor vinayakan : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி உடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் ஆசைப்படுவது வழக்கம் ஏனென்றால் அவரது படத்தில் நடித்து விட்டால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கும் என கணக்கு போடுவது வழக்கம் ஆனால் அது எல்லோருக்கும் நடப்பதில்லை.
கிடைத்தவர்கள் பிரபலமாக இருக்கின்றனர் அப்படி அண்மையில் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியானது படம் முழுக்க முழுக்க அப்பா மகன் பாசத்தை எடுத்துரைக்கும் கதையாக இருந்தாலும் படத்தில் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு..
விநாயகத்தின் ரவுடிசம் என அனைத்தும் விரல வைத்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. இந்த படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் படத்தில் பணியாற்றிய அந்த வகையில் ரஜினி, நெல்சன் திலிப்குமார், அனிருத் இசையமைப்பாளர் அனிருத் ஆகியவர்களுக்கு ஒரு கோடி மதிப்பிலான சொகுசுகாரை பரிசாக கொடுத்தார்.
மற்றவர்களுக்கு தங்க நாணயம் தேவை கொடுத்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் நடித்து விநாயகன் பெரிய அளவில் பிரபலம் அடைத்து உள்ளார். பட வாய்ப்புகளும் குவிகின்றன. இந்த நிலையில் நடிகர் விநாயகன் தனக்கு ஜெயிலர் படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என்பது குறித்து விலாவாரியாக கூறியுள்ளார்.
அவர் சொன்னது என்னவென்றால் ஜெயிலர் படத்தில் வர்மன் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு 30 லட்சம் தான் சம்பளமாக கொடுத்தார் என கூறியுள்ளார் ஆனால் இணையதளங்களில் வெளியானது என அவருக்கு ஒரு கோடி, 2 கோடி என கூறப்பட்டது.