Leo : தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்தார். படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. இதுவரை மட்டுமே சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லியோ படத்தின் சூட்டிங் முடிந்த கையோடு விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடித்த வருகிறார் இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் விஜய் உடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், விடிவி கணேஷ்..
பிரேம்ஜி, கங்கை அமரன், அரவிந்த், அஜ்மல், மீனாட்சி சௌத்திரி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் லியோ படம் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் சமீபகாலமாக தியேட்டருக்கு கம்மி பர்சன்டேஜ்ல தான் படங்களை கொடுத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக லியோ பணத்திற்கு 20% தான் கொடுத்தனர் இருந்தாலும் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் கூட்டம் அதிகமாகும் இதனால் கேண்டீன் மற்றும் கார், பைக் பார்க்கிங் மூலம் நல்ல வசூலை அள்ளலாம் என கணக்கு போட்டு உரிமையாளர்கள் படத்தை ரிலீஸ் செய்தனர்.
முதல் வாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தற்போது 7 -வது நாள் மற்றும் 8 -வது நாளில் சரிவை சந்தித்துள்ளது உள்ளதாக கூறினார். ஏழாவது நாள் முடிவில் 20% மக்கள்தான் வந்து பார்த்துள்ளனர் என்றும் எட்டாவது நாள் முடிவில் 10% மக்கள்தான் பார்த்து உள்ளனர். லியோ படத்திற்கு அடுத்தடுத்த நாள் சரிவை சந்தித்து வருவதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.
பிஸ்மி : LEO-க்கு முதல் 6 நாள் தான் கூட்டம் வந்தாங்க. 7-வது நாள் தியேட்டருக்கு வந்த மொத்த பார்வையாளர்களே 20% தான். 8-வது நாள் அது சுத்தமா குறைஞ்சு 10% ஆகிடுச்சு.
ரஜினிக்கு ஒரு LINGA மாதிரி
விஜய்க்கு ஒரு LEO.😂😂😂
இவனுங்க தானே வளர்த்துவிட்டானுங்க – நல்லா… pic.twitter.com/3BRxR5AlDo
— Satheesh (@Satheesh_2017) October 28, 2023