விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் சூட்டின் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டப்பட பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது விஜயின் ரசிகர்கள் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து யோகி பாபு, எஸ்.ஜே சூர்யா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள்.
மேலும் வாரிசு படத்திற்கு தமன் அவர்கள் இசையமைத்து வருகிறார் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தீபாவளி அன்று வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வாரிசு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை எண்ணூர் பகுதியில் தொடங்கப்பட்டு மிகவும் பிசியாக நடைபெற்று வந்துள்ளது. எண்ணூர் பகுதியில் நடைபெறும் வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர் மன்ற நிர்வாகியின் அழைப்பிதழின் பேரில் விஜய் ரசிகர்கள் சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் அங்கு பாதுகாப்பாக செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது ஆனால் விஜய் ரசிகர்களை சூட்டிங் ஸ்பாட் உள்ளேயே அனுமதிக்காத பவுன்சர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கிறார்கள். அதோடு அங்கு சென்ற 500க்கும் மேற்பட்ட ரசிகர்களை போலீசாரை வைத்து விரட்டி அடித்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடப்பட்டுள்ளார்கள்.
மேலும் படங்கள் வெளியாகும் பொழுது பேனர் வைத்து உயிரையே விட்ட ரசிகர்களை பார்த்து விஜய் கைகூட அசைக்கவில்லை என்றும் அவர்கள் மிகவும் வருத்தமாக கூறியுள்ளார்களாம். பிறகு சில ரசிகர் மன்ற நிர்வாகிகள் எங்களை உள்ளே விடவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஜினி, சூர்யா போன்ற நடிகர்களின் படங்களின் ஷூட்டிங் நடந்தால் உள்ளே அனுமதிப்பதாகவும் விஜய் மட்டும் தங்களை உள்ளே விடவில்லை எனவும் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தற்பொழுது வரையிலும் வாரிசு பட குழுவினர்கள் தரப்பிலிருந்து எந்த தகவலும் விளக்கம் கொடுக்கவில்லை. மேலும் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பிற்காக ரசிகர் செல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று கேள்வியும் எழுழந்துள்ளது.
பொதுவாக எந்த நடிகர், நடிகைகளாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக பவுன்சர்கள் எந்நேரமும் இருக்கின்றார்கள். எனவே இவ்வாறு இருக்கும் பொழுது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் அங்கு சென்றதும் பிறகு போலீசார்கள் தடியடி நடத்தியதும் தேவையில்லாத ஒன்று என பலரும் கூறி வருகிறார்கள்.