தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் இயக்குனர் பா ரஞ்சித் இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் ஹிட் அடித்தன. அதனைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கி உள்ள திரைப்படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படம் தற்பொழுது நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாகவே இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது.
இயக்குனர் பா ரஞ்சித்திற்கு இந்த படமும் ஒரு வெற்றிப்படம் லிஸ்டில் இணையும் என தெரிய வருகிறது நட்சத்திரம் நகர்கிறது படத்தில கலையரசன், ஜெயராம் காளிதாஸ், துஷாரா விஜயன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர். இப்படி சினிமா உலகில் வெற்றியை ருசித்து வரும் பா ரஞ்சித் சந்தோஷ நாராயணன் உடன் கைகோர்த்து பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளனர் இவர்கள் இருவரும் இணைந்த படங்கள் வெற்றி படங்கள் தான்.
ஆனால் ஒரு சில காரணங்களால் தற்பொழுது சந்தோஷ் நாராயணனை கைவிட்டு விட்டு பா ரஞ்சித் வேற இசையமைப்பாளரை வைத்து பணி வருகிறார் இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அண்மையில் சந்தோஷ நாராயணன் பற்றி பா.ரஞ்சிதிடம் கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு அவர் கூறியுள்ளது. சந்தோஷ் நாராயணன் பாடல்களை நான் முதலில் கேட்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை முதலில் அவருடைய இசை வெஸ்டர்னா.. ஃபோக்கா.. இருந்தது
ஆனா அவர் அதை கண்ட்ரோல் பண்ற விதம் எனக்கு ரொம்ப பிடித்தது. அதனால் அவரோட இணைந்து வேலை செய்தேன் அப்புறம் நான் என்ன கேட்கிறேன்னு அவர் தெளிவா புரிஞ்சுப்பார் என்று கூறினார் மேலும் பேசிய அவர் நான் எல்லோரையும் அவங்களோட சவுண்டு வச்சு தான் மதிப்பிடுவேன் அவர் பயன்படுத்துற சவுண்டு நல்லா இருக்கும் எனக்கு இது மேல ஒரு லேயர் வேணும்னு கேட்டா அது என்னன்னு கரெக்டா புரிஞ்சி செய்வார்
எனக்காக முதல்ல அவர் பண்ண பாட்டு வா ரூட் தல தான் எனக்கு அந்த பாட்டு அவ்வளவு பிடிக்கல அதுக்கு அப்புறம் நான் நடுக்கடல ஆடி போனா ஆவணி எல்லாம் பண்ணினோம்.. இப்போ தென்மாவை வேலை வாங்குவது எனக்கு கஷ்டமா தான் இருக்கு.. அவர் பெரிய கலைஞன் அவரை கூப்பிட்டு வந்து சினிமாவுக்கு இதெல்லாம் பண்ணனுமானு சொல்லும் போது கஷ்டமா இருந்தது ஆரம்பத்தில் அவர் கிட்ட தான் என்ன எதிர்பார்க்கிறேன்னு சொல்றது கஷ்டமா இருந்துச்சு என கூறினார்..