ரஜினி கமலுக்கு பிறகு தமிழ் சினிமா பெரிய அளவில் நம்பி இருப்பது அஜித் மற்றும் விஜய் தான் இருவரும் தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் இரு தூண்களாக இருக்கின்றனர் இவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் அண்மை காலமாக ஒவ்வொரு திரைப்படம் முடியும்பொழுது அடுத்த திரைப்படத்திற்காக சற்று சம்பளத்தை அதிகரித்து வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.
விஜய் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடுவதால் அவர் சற்று சம்பளத்தை அதிகரிப்பது கூட பிரச்சனை இல்லை ஆனால் அஜித் கடைசி இரண்டு படங்கள் தோல்வியடைந்த பொழுதும் 105 கோடி சம்பளம் கேட்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக பிரபல இயக்குனர் கே. ராஜன் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இரண்டு படங்கள் தோல்வி அடைந்தாலும் அந்த இரண்டு படங்களுக்கு அஜித் வாங்கிய சம்பளம் 65 கோடி ஆனால் இந்த படத்திற்கு 105 கோடி வெற்றி அடைந்தால் கூட்டி இருக்கலாம் ஆனால் இரண்டு படமும் தோல்வி. முதலில் அஜித் நன்றாக தான் இருந்தார் நிறைய பாராட்டி இருக்கிறேன். ஆனால் இந்த கொடூர குணம் அஜித்திற்கு வந்திருக்கக் கூடாது. நான் கேள்விப்பட்டது தான்.
அப்படி இல்லை என்றால் பாராட்டுவேன் மற்றவர்கள் நஷ்டம் அடைய விடக்கூடாது மூன்று படங்களுக்கு சம்பளத்தை பிரித்துக் கொடுத்தால் மற்றவர்களுக்கும் பயனடைவார்கள் என்று தன் ஆதங்கத்தை போட்டு உடைத்தார். அண்மைக்காலமாக கே ராஜன் சினிமா நடிகர்கள் பண்ணும் லூட்டி மற்றும் நடிகர் சம்பளம் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டே வருகிறார்.
அதே சமயம் தயாரிப்பாளர்களுக்கும் பல நிபந்தனைகளை வைத்துக்கொண்டு தான் இருக்கிறார் அதில் அவர் சொல்வது குறைந்த பட்ஜெட்டில் படங்களை எடுங்கள் அந்த படம் வெற்றி தரும் பிரம்மாண்ட பட்ஜெட்டை போட்டுவிட்டு லாபம் பார்க்க முடியாமல் தவிக்க வேண்டாம் எனவும் அறிவுரை கொடுத்து வருகிறார்.