என்னோடைய தீவிர ரசிகர் தான் அந்த முன்னணி நடிகர்.! எஸ் ஜே சூர்யா நெகிழ்ச்சி.!

sj surya
sj surya

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் இந்த இரண்டிற்கும் மிகவும் பொருத்தமானவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர்,நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும்  வில்லன் போன்ற அனைத்து கேரக்டரிலும் உள்வாங்கி நடிக்கும் பன்முகத் தன்மை கொண்டவர்.

எனவே ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. இவ்வாறு இவருடைய திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் போகப்போக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் நடிகைகளுடன் மிகவும் அதிகமாக ரொமான்ஸ் செய்யும் கட்சிகள் இருந்ததால் பல ரசிகர்களுக்கு மற்றும் பெண்களுக்கு பிடிக்காமல் போனது.

இவர் பல படங்களை  இயக்கியிருந்தாலும் வாலி திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றியை தந்தது. இதனைத் தொடர்ந்து குஷி, நியூ,  அன்பே ஆருயிரே, இசை போன்ற பல படங்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா முன் நடித்தது போல் இல்லாமல் பெண்களுக்கு மரியாதை தரும் விதமாக மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.

இப்படத்தைப் பற்றிய பேட்டி ஒன்றில் எஸ்.கே சூர்யா யாருக்கும் தெரியாத சிகரெட் ஒன்றை கூறியுள்ளார். நடிகர் அஜித் மற்றும் விஜய்க்கு எஸ்.கே சூர்யாவின் நடிப்பு மிகவும் பிடிக்குமாம். அதுமட்டுமல்லாமல் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு நடுராத்திரியில் போன் பண்ணி மணிக்கணக்கில் பேசி உள்ளதாகவும் கூறியிருந்தார்.