நடிகை நமிதாவுடன் நான் நடித்த அந்த மாதிரியான காட்சி..! தன் மகன் கேட்கும் கேள்வியால் மனம் நொந்துபோன சரத்குமார்..!

sarathkumar-2
sarathkumar-2

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டார் என்றும் போற்றப்படுபவர் தான் நடிகர் சரத்குமார் இவர் பிரபல நடிகர் மட்டுமின்றி பிரபல அரசியல் கட்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு பல்வேறு வகையில் தொண்டு செய்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ராதிகாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சரத்குமார் சில வருடங்களுக்கு முன்பாக திரைப்பட கலைஞர்கள் நடத்திய சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக பொறுப்பேற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் சினிமாவில் நடிக்கும் பொழுது எப்பொழுதும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தான் பெருமளவு நடித்திருப்பார்.

அந்த வகையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பெருமளவு ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம் மேலும் நமது நடிகர் திரைப் படங்களில் ஹீரோவாக மற்றும் வில்லனாக நடிப்பது மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவது வழக்கமான ஒரு செயல்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் ஏய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்தது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நமீதா வடிவேலு போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அர்ஜுனா அர்ஜுனா என்ற பாடலுக்கு மாஸ்டர் சுந்தரம் தான் நடனம் கற்றுக் கொடுத்தார் அப்பொழுது கட்டுப்பாடுகள் நிறைந்த அந்தப் பாடலில் நமிதா தொப்புளில் முத்தம் கொடுக்குற மாதிரியான காட்சி மற்றும் வாயில் இருந்து தண்ணீர் வரும் படியான காட்சி இடம் பெற்றிருந்தது.

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு என நான் மாஸ்டரிடம் சொன்னேன் ஆனால் அவர்  அப்படி நினைக்காதீர்கள் மக்கள் இதனை விரும்புவார்கள் என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார்கள். ஆனால் தற்போது என்னுடைய பையன் இந்தப் பாடலைப் பார்த்து விட்டு என்னிடம் இதெல்லாம் என்ன என கேள்வி எழுப்பி வருகிறார்.

sarathkumar-1

இவ்வாறு அதை நினைத்தால் ஏன் அந்த பாடலில் இப்படி நடித்தோம் என்று தோன்றுவது மட்டுமில்லாமல் அந்தப்பாடல் டிவியில் ஒளிபரப்பான உடனே டிவியை ஆப் செய்ய சொல்லி விடுவேன் அல்லது வேறு பாடலைப் பாருங்கள் என சொல்லி விடுவேன் என சரத்குமார் கூறுவாராம்.