பிரேமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை சாய் பல்லவி தமிழில் இவர் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தார். தமிழ், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்தாலும்..
தற்போது சாய்பல்லவிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதால் தொடர்ந்து தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் தற்போது கூட ராணா டகுபதி உடன் கைகோர்த்து விராட பர்வம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் நேற்று திரையரங்கில் கோலாகலமாக வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து காத்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அவரது சினிமா பயணம் உயர்ந்துகொண்டே போகும் என தெரிகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
30 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் எடுத்தவுடனேயே கல்யாணம் செய்யவில்லை என கேட்டுள்ளனர் அதற்கு நான் தற்பொழுது சிங்கிளாக இருக்கிறேன் என கூறினார் மேலும் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக எந்த மாதிரியான பசங்க..
உங்களுக்கு பிடிக்கும் என கேட்டுள்ளனர் அதை சாய்பல்லவி கருப்பாக இருக்க கூடிய பசங்க தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக கூறியுள்ளார். உடனே ரசிகர்கள் அந்த அரங்கம் அதிர கத்தி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது