அவங்கள பார்த்தா பாவமா இருந்துச்சு..! அந்த ஒரே காரணத்தினால் தான் அந்த திரைப்படத்தில் நடித்தேன் உண்மையை உடைத்த கயல் ஆனந்தி..!

kayal-ananthi-1

தமிழ் திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆனந்தி இவர்  திரை உலகில் முதன் முதலாக 2012ஆம் ஆண்டு வெளிவந்த பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில்  நடித்து தமிழ் சினிமாவில் தனது முகத்தை காட்ட ஆரம்பித்த ஆனந்தி கயல் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை எளிதில் கவர்ந்து விட்டார்.

இவ்வாறு இவர் பார்ப்பதற்கு அழகாகவும் அவர் கன்னத்தில் இருக்கும் மச்சம் பல ரசிகர்களை கவரும் வண்ணமும் இருப்பதன் காரணமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தமிழில் விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, பரியேறும் பெருமாள் போன்ற பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது அந்தவகையில் இவர் நடித்த திரைப்படங்களில் சுவாரஸ்யமான விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

கயல் கயல் ஆனந்தி திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் நடித்த நினைத்து ஏண்டா இந்த திரைப்படத்தில் நடித்தோம் என பீல் பண்ணினாராம் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இயக்குனர் தன்னிடம் சொன்ன கதை ஒன்று அவர் எடுத்த கதை ஒன்றாக இருந்தது.

kayal ananthi-2
kayal ananthi-2

அந்த வகையில் நான் இந்த திரைப்படத்தில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டேன் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் போட்ட பணத்தை நினைத்து புலம்பினார்கள். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பாவமாக இருந்த ஒரே காரணத்தினால் தான் இந்த திரைப்படத்தில் நடித்தேன் என கயல் ஆனந்தி கூறியுள்ளார்.