விஜய், விஜய்சேதுபதியுடன் நடிக்கணும் அதுதான் என்னுடைய கனவு – சூர்யா பட நடிகை பேட்டி.!

vijay-
vijay-

சினிமா உலகில் ஒரு நடிகை நல்ல இடத்தைப் பிடிக்க தொடர்ந்து கிளாமர் மற்றும் நல்ல கதாபாத்திரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தினால் எப்போதும் ரசிகர்களும் மக்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அந்த வகையில் 18 வயதான இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி.

தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்து உள்ளார் மேலும் வாய்ப்புகளும் அவருக்கு குவிகின்றன. தமிழில் நடிகை கீர்த்தி செட்டி சூர்யாவின் 41 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் முதல்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஜூலையில் ஆரம்பிக்கும் என தெரியவருகிறது.

தமிழில் எடுத்தவுடனேயே சூர்யாவுடன் நடித்து உள்ளதால் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாக உள்ள ஒரு புதிய படத்திலும் கீர்த்தி செட்டி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் இரண்டு விஜயுடனும் நடிக்க ஆசை தெரிவித்தார் யார் அந்த இரண்டு விஜய் என கேட்டுள்ளனர்.

ஒன்று தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை  கவர்ந்து வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் என கூறினார் மற்றொரு ஹீரோ அண்மை காலமாக ஹீரோ வில்லன் கதாபாத்திரத்தில்  பின்னி பெடல் எடுக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என கூறினார். விஜய் , விஜய் சேதுபதியுடன் நடிக்க ரொம்ப ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.