தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1, நம்பர் 2 நடிகைகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா. இவர்கள் இருவரும் வருடத்திற்கு குறைந்தது இரண்டு, மூன்று படங்களை கொடுத்து வருவதால் இவருடைய மார்க்கெட் எந்த அளவிலும் குறைந்தபாடி இல்லை. அதனால் சம்பளமும் அதிகமாக வாங்குகிறார்கள்.
இப்படி இருந்தாலும் அவ்வபொழுது சில சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது பழக்கம் அதன்படி நடிகரும், பத்திரிகையாளருமான பியில்வான் ரங்கநாதன் நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா பற்றி பேசியது தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அவர் சொன்னது.. பெரும்பலான நடிகைகள் கவர்ச்சியை மட்டும் காட்டாமல் நல்ல திறமையை காட்ட வேண்டும்.
அப்படியே நயன்தாராவை பாருங்கள் சில படங்களில் கவர்ச்சியாக நடித்து தற்போது அவருக்கு திறமை இருந்ததால் கதையின் கதாநாயகியாக வளர்ந்து இருக்கிறார். அதெல்லாம் சாவித்திரி போன்றவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்ப மாறிவிடுவார்கள் 15 வருடங்களாக நடிகைகள் குத்தாட்டம் போட்டு வருகிறார்கள்.
நடிப்பின் மீது நம்பிக்கை போய் சதை மேல் தான் நம்பிக்கை வைக்கிறார்கள் இப்பொழுது நடிகைகள் என்றும் ஆபாசத்தை அப்படி ரசிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் பழைய நடிகைகள் சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா போன்ற நடிகைகள் மஞ்சள் போன்ற இயற்கை மேக்கப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் தற்பொழுது உள்ள நடிகைகள் வெளிநாட்டு மேக்கப் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
ரசாயன மேக்கப் பயன்படுத்துவதனால் முகபாவனை எப்படி வரும் அப்படிதான் நடிகைகள் சமந்தா, நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா போன்றவர்கள் இப்படியான ரசாயன மேக்கப் போட்டு முகப்பொலிவை இழந்து விட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது