தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக நடித்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர் நடிகராக மட்டுமல்லாமல் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் இவர் நடிப்பில் வெளியாகி பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடைந்துள்ளன அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய காஞ்சனா முதல் பாகம், இரண்டாவது பாகம், மூன்றாவது பாகம் ,என மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் காஞ்சனா மூன்றாவது பாகத்தில் நடிகை ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி, கோவை சரளா, என பலரும் நடித்திருந்தார்கள். திகில் கலந்த நகைச்சுவை திரைப்படமாக வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகமானவர் நிக்கி டம்போலி.
இதனைத் தொடர்ந்து இவர் ஒரு சில தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நிக்கி டம்போலி மகாராஷ்டிராவை சேர்ந்தவர் விளம்பர நடிகையாக நடிக்க ஆரம்பித்த இவர் தெலுங்கு மொழியில் அறிமுகமானார். மேலும் தெலுங்கில் இன்னும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார்.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி போல் ஹிந்தியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியிலும் நிக்கி டம்போலி கலந்து கொண்டார் இந்த நிலையில் நிக்கி டம்போலி ஒரு இயக்குனர் பற்றி வெளியிட்ட தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இயக்குனர் ஒருவர் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டது குறித்து அவர் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது நான் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறேன் ஆனால் தென்னிந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் ஒருவர் என்னை மோசமாக நடத்தினார் உடல் ரீதியாக இல்லாமல் வெளிநாட்டில் நான் சென்ற பொழுது என்னை அவமதித்து மிகவும் கீழ்தரமாக நடத்தினர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் யார் அந்த இயக்குனர் கூறுங்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் நிக்கி டம்போலி நான் அந்த இயக்குனருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அதனால் யார் என்பதைக் கூற மாட்டேன் என கூறிவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் யார் அந்த இயக்குனர் என கேட்டு நச்சரித்து வருகிறார்கள்.