என்னதான் தற்போது நிறைய திரைப்படங்களை பல காமெடி நடிகர்களும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் மக்கள் பலரும் யோகிபாபுவுக்கு நல்ல சப்போர்ட் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக இவர் வலம் வருகிறார். இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் மிகவும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் வெற்றி பெற்று வருகிறது.
யோகி பாபு தனது வித்தியாசமான நடிப்பு மற்றும் குரல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார் இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அவ்வாறு பார்த்தால் இவர் கதாநாயகனாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இவர் எப்போது கதாநாயகனாக நடிப்பார் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் இவர் பீஸ்ட்,வலிமை போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம்.அதைவிட நடிகர் சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதில் பேசிய யோகி பாபு பல விஷயங்களை பகிர்ந்து உள்ளாராம் அதில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பாக்யராஜ் அலுவலகத்தில் நான் அடிக்கடி வாய்ப்பு கேட்டு நின்றிருக்கிறேன் சித்து+2 படத்தில் எனக்கு சின்ன கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
#YogiBabu pic.twitter.com/A7BJKTecut
— Dinasuvadu Cinema (@CinebarTamil) September 13, 2021
என்னதான் தற்பொழுது நான் பிரபலமான நடிகராக வலம் வந்தாலும் என்னால் இயக்குனர் பாக்யராஜ் அவர்களை மறக்கவே முடியாது நான் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என கூறியுள்ளாராம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.