Ajith : பிரேம புஸ்தகம் என்னும் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு என்ட்ரி கொடுத்தார் நடிகர் அஜித். அதன் பிறகு அமராவதி, காதல் கோட்டை, காதல் மன்னன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக உருவானார் அதன் பிறகு தீனா, மங்காத்தா போன்ற ஆக்சன் படங்களில் நடித்து அல்டிமேட் ஸ்டார் ஆக வளம் வந்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்தார். படம் பெரிய வெற்றியை பெற்றது. ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். அன்றிலிருந்து அஜித் உடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.
இன்று டாப் நடிகராக வரும் விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட அஜித் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார் அதற்கு உதாரணமாக சில விஷயங்கள் நடந்திருக்கு அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 50 -வது படம், 100 -வது படம் மிகப்பெரிய ஒரு படமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
அதற்காக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்ப்பது வழக்கம்ம் ஆனால் அஜித் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 50 -வது படத்தில் நடிக்க முடிவு செய்தார். இதை உணர்ந்திருந்த ரசிகர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏன் நடிக்கிறீர்கள்? அவர் சீரியஸாக படம் எடுக்க மாட்டார்.
ஷூட்டிங்கில் கிரிக்கெட் விளையாடுவார் 6 மணிக்கு மேல் தான் பார்ட்டிக்கு போய்விடுவார் காலையில் போதையில் தான் படப்பிடிப்பிற்கு வருவார் என அஜித்திற்கு கூறியுள்ளனர் ஆனால் அஜித் தனது முடிவிலிருந்து மறைவே இல்லை மங்காத்தா படத்தில் நடித்தார். படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது. தப்பாக பேசியவர்களின் முகத்தில் கறியை பூசியது.