விஜய் ஆண்டனிக்கு சிவகார்த்திகேயனால் தான் அந்த ஆசை வந்தது.!

2012ஆம் ஆண்டு வெளிவந்த நான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. இதனைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பிரபலமடைந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பொதுவாக விஜய் ஆண்டனி ஒவ்வொரு திரைப்படங்களின் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடும். தற்பொழுது இவர் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 மற்றும் ஆனந்தகிருஷ்ணன் இயக்கிவரும் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  ஆனால் பிச்சைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பிரியா கந்தசாமி  தற்பொழுது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கதை. டைட்டில் என்று அனைத்தும் வித்தியாசமாக இருக்கும்.ஆனால் தற்போது இவர் சிவகார்த்திகேயனை போல நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

அந்த வகையில் ஒரு பேட்டியில் விஜய் ஆண்டனியின் பெப்பர் சால்ட் போன்ற படங்களில் நான் நடித்து வருகிறேன் ஆனால் சிவகார்த்திகேயன் போல காதலும் காமெடியும் கலந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. எனவே காதல் கதையை வைத்து இருந்தால் எந்த இயக்குனராக இருந்தாலும் என்னை அணுகலாம் என்று கூறியுள்ளாராம்.